தலைக்கனம் ஏறிடுச்சா? ஓவரா ஆடுறீங்க? சரத்குமாரை மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர் (வீடியோ)

Author: Shree
7 July 2023, 10:07 am

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் போன்ற பலர் நடித்து கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் இப்படத்தின் கதை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.

த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுக்கு போட்டியாக சுனில் சுகாதா வில்லனாக மிரட்டினார். மலையாள நடிகையயான நிகிலா விமல் இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்கில் ஓடியது.

இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் படத்தின் இயக்குனர் இடம், ” உங்க படத்தின் டீமிற்கு தலைக்கனம் அதிகமாகிடுச்சா? இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் பத்திரிகையாளரை பார்த்ததும் நீங்க ஏன் மேல வரீங்க கீழ போயி உட்காருங்கனு சொல்றாரு. ஒரு படம் தானே ஹிட் ஆகிற்கு அதுக்குள்ளயா தலைகீழா குதிக்கும் என மோசமாக திட்டினார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சரத்குமார் எழுந்துவந்து… தம்பி தம்பி அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இதனால் அங்கு சின்ன சலசப்பபு ஏற்பட்டது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்ஸ் பலரும் அந்த பத்திரிகையாளரை திட்டி வருவதோடு சரத்குமாரின் செயலை பாராட்டியுள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ