30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!

Author: Selvan
6 February 2025, 8:57 pm

3BHK படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவில் 90-களில் உச்ச நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார்,பல படங்களில் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் சிறிது காலம் நடிப்பிற்கு பிரேக் போட்டார்.அதன் பிறகு தற்போது பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும்,குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கம் பேக் கொடுத்து வருகிறார்.

Is 3BHK the next Suriyavamsam 2?

இந்த நிலையில் இவருடைய நடிப்பில் தற்போது 3BHK படம் உருவாகியுள்ளது.இப்படத்தை 8 தோட்டாக்கள்,குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார்,இப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு மனைவியாக நடிகை தேவயானி நடித்துள்ளார்.கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு சரத்குமாருடன் தேவயானி நடித்துள்ளார்,இவர்களுக்கு மகனாக நடிகர் சித்தார்த் நடிக்கிறார்,மேலும் யோகி பாபு,சைத்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்க: பிரபல நடிகர் வீட்டில் திடீர் சோகம்…துயரத்தில் குடும்பம்…ஆறுதலில் இறங்கிய திரைபிரபலங்கள்.!

ஏற்கனவே சூர்யவம்சம் திரைப்படத்தில் கஷ்டத்தில் இருக்கும் போது தேவயானியை கல்யாணம் பண்ணி ஒரே பாட்டில் ஓஹோனு முன்னேறி இன்றும் பல ரியல் ஜோடிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் இந்த பிரபல ரீல் ஜோடியை,மீண்டும் திரையில் பார்க்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது 3BHK படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளதால்,அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் சரத்குமாரின் குடும்பத்திற்கு சொந்த வீடு எப்படி கட்டுவது என்ற கருவை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் இந்த வருடம் கோடை விடுமறையொட்டி ரிலீசுக்கு வரலாம் என கூறப்படுகிறது.மேலும் இது சூர்யவசம் 2-வா இருக்குமா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!
  • Leave a Reply