தேவயானியை காரி துப்பிய சரத்குமார்…படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

Author: Selvan
7 November 2024, 4:39 pm

கட்சிதமாக அந்த காட்சியை நடித்து முடித்த சரத்குமார்….. இயக்குனர் பெருமிதம்..!

தமிழ் திரையுலகில் வசீகர தோற்றமும் கம்பீரமான உடல் அமைப்பை கொண்டவர் சரத்குமார் .1990 களில் மிக பிஸியாக வலம் வந்து வெற்றி படங்களை வாரி குவித்து வந்தார்.


அந்த வகையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சூர்யவம்சம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.அதுமட்டுமில்லம்மால் சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.


இத்திரைப்படத்தில் சரத்குமார் அப்பா,மகன் என்று இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.அப்பாக்கு ஜோடியாக ராதிகாவும் மகனுக்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருப்பார்கள்.

அதில் ஒரு காட்சியில் சரத்குமார் மட்டும் திருமண மண்டபத்தில் தனியாக சாப்பிடுவது போல் காட்சி வரும்.அதை பார்த்த தேவயானி சரத்குமார் மேல் பரிதாபபட்டு உணவு பரிமாறுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

அதற்காக ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் மதியமே ஆர்டர் பண்ணி வாங்கி வைத்துவிட்டோம். ஆனால் அந்த காட்சி இரவு தான் எடுக்க முடிந்தது.

அப்போது தேவயானி உணவு ஊட்டும் காட்சி முடிந்த பின்பு வேகமாக வாஷ் பேஷன் சென்று வாயில் இருந்த உணவை சரத்குமார் துப்பினார். அந்த உணவு ஏற்கனவே கெட்டு பொய் விட்டது என்று அப்போது தான் எனக்கு தெரிந்தது.அது முன்கூட்டியே சரத்குமாருக்கு தெரிந்திருக்கும்.

இதையும் படியுங்க: விஜய் 69 திரைப்படம் ஓடிடியில் ரீலிஸ்…படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

ஆனால் ஷாட் நன்றாக வர வேண்டும் என்பதால் அதை என்னிடம் புகார் அளிக்காமல் கட்சிதமாக நடித்து முடித்தார் என்று தற்போது பேட்டி ஒன்றில் பாராட்டியுள்ளார் இயக்குனர் விக்ரமன்.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu