வரலக்ஷ்மி கணவரை குடும்பத்தை விட்டு ஒதுக்கினாரா…பொங்கல் அன்று சரத்குமார் செய்த திடீர் செயல்..!
Author: Selvan15 January 2025, 8:04 pm
பிரபல நடிகர் சரத்துக்குமாரின் மகளான வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் குடும்பங்கள் முன்னிலையில் கடந்த வருடம் தாயிலாந்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த நிலையில் தற்போது தங்களுடைய தல பொங்கலை சென்னையில் குடும்பத்துடன் வரலக்ஷ்மி கொண்டாடினார்.
அப்போது நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன சூர்யவம்சம் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியை ரீ-கிரேட் செய்தார்கள்.
இதையும் படியுங்க: ரவி மோகன் ரசிகர்களை இழுத்தாரா…”காதலிக்க நேரமில்லை”படத்தின் திரைவிமர்சனம்..!
அதாவது குடும்பத்துடன் போட்டோ எடுக்கும் போது ராதிகா,சரத்குமாரிடம் என்னங்க சின்ராசு என்று கேட்க,அதற்கு சரத்குமார் எங்க குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு னு சொல்லும் போது மகனாக நடித்த சரத்குமாரை போல் வரலக்ஷ்மி கணவர் ஓரமாக பாவம் போல நிற்பார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.