தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரத்குமாரின் முதல் மனைவி சாயா விவாகரத்து குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். அதில், அவர் பேசுகையில், திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் நாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும், திருமணம் செய்வதற்கு மனதளவில் சரியாக இருக்க வேண்டும். ஆனால், சிலர் தவறான காரணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் என்பது ஒருநாள் கூத்து கிடையாது.
திருமணம் என்பது ஒரு பயணம் அதில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால், அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். அவையெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது. நீங்கள் தவறான காரணத்திற்காக திருமணம் செய்தால் அது கடைசியில் பிரிவை சந்திக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.