ரெண்டு பொண்டாட்டியும் ஒரே நேரத்தில் பண்ண சொன்னாங்க…. வியர்த்து விறுவிறுத்துப்போன சரத்குமார்!

Author: Shree
15 September 2023, 10:13 am

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். இந்நிலையில் ஆரம்பத்தில் மகள் வரலட்சுமியை சரத்குமார் நடிக்கவே விடவில்லையாம். தன் மகள் நடிக்க செல்வதில் அவருக்கு விருப்பமே இல்லையாம். அவரின் விருப்பத்தை மீறி தான் வரலட்சுமி தற்போது நடித்து வருகிறார். இது குறித்து வரலக்ஷ்மி அம்மா சாயாவிடம் கேட்டாராம்.

அவரோ அப்பாவிடம் கேளு அவர் ஓகே சொன்னால் நடிக்க போ என சொல்லிவிட்டாராம். பின்னர் வரலக்ஷ்மி சரத்குமாரிடம் கேட்க எடுத்த எடுப்பிலேயே வேண்டாம் என கூற பின்னர் ராதிகாவும், சரத்குமாரின் முதல் மனைவி சாயாவும் சேர்ந்து சரத்குமார் நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பிற்கே சென்று மகளை நடிக்க வைத்தால் என்ன தப்பு? நாம் அனைவரும் சினிமா தொழிலில் இருப்பவர்கள் தான் எனவே பாதுகாப்பாக இருப்பார் பார்த்துக்கொள்ளலாம்.

தயவு செய்து வரலக்ஷ்மி சினிமாவில் நடிக்க சம்மதியுங்கள் என கேட்டார்களாம். இரண்டு மனைவிகளும் ஒன்று சேர்ந்து வந்ததால் படப்படப்பில் வியர்த்த சரத்குமார், சரி என்று ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்தே வரலட்சுமி போடா போடி படத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைத்து திறமையான நடிகையாக கோலிவுட்டில் கால் பதித்துவிட்டார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…