69 வயசுனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க … தகத்தன்னு மின்னும் சரத்குமார்!

Author: Rajesh
9 February 2024, 9:30 pm

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

sarathkumar-updatenews360

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். போர் தொழில் திரைப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது . இந்நிலையில் சரத்குமார் மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாகும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 69 வயசிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என அவரை பார்த்து வியந்துவிட்டனர் ரசிகர்கள்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!