வரலட்சுமிக்கு விரைவில் டும்டும்டும்?… மகளின் திருமணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய சரத்குமார்..!

Author: Vignesh
3 March 2023, 3:30 pm

டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

varalakshmi - updatenews360

இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி. சமீபத்தில் கூட பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்த வீரசிம்ஹா ரெட்டி படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகை வரலட்சுமி நடிப்பில் கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

sarathkumar updatenews360

இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வரலட்சுமியின் தந்தை சரத்குமாரிடம், அவரது மகளின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த சரத்குமார், “அது வரலட்சுமியுடைய தனி விருப்பம். தான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும், தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டதாக வரலட்சுமி வந்து தன்னிடம் கூறும்போது அவருக்கு திருமணம் செய்துவைப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் விஷாலை சில ஆண்டுகள் காதலித்த வரலட்சுமி, பின்னர் அவரை பிரேக் அப் செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1080

    3

    1