வரலட்சுமி பத்தி தப்பா பேசுவியா?.. மட்டமாக பேசிய நபருக்கு எச்சரிக்கை விடுத்த சரத்குமார்..!

Author: Vignesh
11 July 2024, 4:44 pm

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar

வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வரலட்சுமியின் கணவர் ஆபத்தானவர் போன்ற நெகடிவ் கருத்துக்கள் அவரின் உடல் தோற்றத்தை வைத்து பலரும் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சரத்குமார் தற்போது, பேசியுள்ள அதாவது தனது மகள் திருமணத்தில் எழுந்த தவறான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

varalakshmi sarathkumar

அதில், அவர் பேசுகையில் நான் சமூக வலைதளங்களை கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கை விமர்சித்து வருகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும். இப்படி மறைந்திருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கப் போகிறது. நான் உங்களுக்காக மட்டும் பேசவில்லை. எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன். உங்கள் மனதில் எழும் கற்பனையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கண்ணா பிண்ணா என்று பேசுவதற்கு உரிமை யார் கொடுத்தது.

varalakshmi sarathkumar

நான் எப்போதும் நெகட்டிவ் கமெண்ட்களை பார்க்க மாட்டேன். ஆனால், சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வது மனதளவில் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய மகள் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு, நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. வரலட்சுமி எதற்காக திருமணம் செய்து கொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், சில தவறான கமெண்ட்கள் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 195

    0

    0