ராதிகாவுக்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?..

Author: Vignesh
3 June 2024, 7:08 pm
radhika sarathkumar
Quick Share

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: என்ன ஜென்மம்.. ஊர் உலகம் ஒப்புக் கொள்ளுமா?.. சூர்யா – ஜோதிகா காதல் குறித்து சிவகுமார் இப்படி சொல்லிட்டாரே..!

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: உங்களுக்கு வயசு ஆகுமா? ஆகாதா? மேக்கப் இல்லாத DD-யின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

முன்னதாக, அகில இந்திய சமத்துவ கட்சி தொடங்கி சரத்குமார் நிர்வகித்து வந்த நிலையில், இப்போது ராதிகாவும் அவருடன் இணைந்து களமிறங்கியுள்ளார். அதாவது, பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்க ராதிகா சரத்குமார் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளார். விருதுநகரில் ராதிகாவிற்கு போட்டியிட தேமுக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டுள்ளார்.

sarathkumar

மேலும் படிக்க: புகைப்படத்தில் இருக்கும் டாப் பிரபலம் யாருனு கண்டுபிடிங்க.. இந்த இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே..!

ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அனைவரும் முடிவுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்று நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் ஸ்ரீ பராசக்தி அம்மன் கோவில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sarathkumar

Views: - 94

0

0