ஷூட்டிங்ல அப்படி பண்ணாரு.. தனுஷ் குறித்து ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்..!

Author: Vignesh
9 August 2024, 10:49 am

ராயன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார் அவரே இயக்கிய இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக, அவர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் குறித்து அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அவரின் இயக்கம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் இயக்குனருமான சரவணன் தனுஷ் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், ஒரு இயக்குனராக தனுஷ் செட்டில் மிகவும் பயங்கரமாக இருப்பார். அவரைப் பார்த்தாலே அனைவரும் பயப்படுவார்கள். அவரை நினைத்தது போல் நடிக்கும் வரை தனுஷ் விடவே மாட்டார். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். அவரை பார்த்து, அனைவரும் நடுங்குவார்கள். மிகவும் சாந்தமாக இருக்கும் தனுஷ் இயக்குனராக ரொம்ப டெரராக இருப்பார் என்று சரவணன் தெரிவித்துள்ளார்.

  • Lollu Sabha actor Srigo Udhay health update பெரும் சோகம்…பரிதாப நிலையில் லொள்ளு சபா காமெடி நடிகர்..!