இளைய தளபதி பட்டம் எனக்கு தான் வேணும்… விஜய்யின் தந்தையிடம் சண்டை போட்ட பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய், திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜய் – திரிஷா இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் இளைய தளபதியாக முதலில் அழைக்கப்பட்ட நிலையில் தற்போது தளபதி என அது மாற்றும் அடைந்திருக்கிறது. மேலும், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், ஒரு பக்கம் பேச்சு இருப்பதால் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது அதற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், விஜய் பெயருக்கு முன் இளைய தளபதி என பட்டம் போட தொடங்கிய போது, அதற்கு பருத்திவீரன் நடிகர் சரவணன் எதிர்ப்பு தெரிவித்தாராம். 90களில் முக்கிய நடிகராக இருந்த சரவணன் இளைய தளபதி என படங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் வாய்ப்பு இல்லாமல் இருந்தாராம். அந்த நேரத்தில், விஜயின் அப்பா SAC இளைய தளபதி பட்டத்தை விஜய் படங்களில் போட சரவணன் அதற்காக சண்டை போட்டிருக்கிறார்.

இதுபற்றி தற்போது, சரவணன் அளித்திருக்கும் பேட்டியில் தான் அந்த சின்ன வயதில் அப்படி கோபப்பட்டு பொறாமையில் சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால், இப்போது அந்த டைட்டில் விஜய்க்கு தான் பொருத்தமாக இருக்கிறது என்பது எனக்கு புரிந்தது என சரவணன் தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

கோரிக்கை வைத்த தமிழக மக்கள்.. நிறைவேற்றி அசத்திய ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…

8 hours ago

இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…

நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…

8 hours ago

நான் இருக்கேன், Don’t worry- லைகாவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் ரஜினிகாந்த்?

நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…

9 hours ago

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்.. களமிறங்கும் முக்கிய வீரர்கள் : ருதுராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…

9 hours ago

கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?

கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…

10 hours ago

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

10 hours ago

This website uses cookies.