ரொம்ப மோசமா சண்டை போடுவோம்.. அந்த நேரத்தில்.. குடும்ப ரகசியத்தை உடைத்த சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா..!
Author: Vignesh1 June 2024, 10:31 am
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணிபுரிந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் மிர்ர்ச்சி செந்தில். அதன் மூலம் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல் நடிகராக இடம் பிடித்தார்.
அதன் பின்னர் தவமாய் தவமிருந்து, மாப்பிள்ளை, பப்பாளி, வெண்நிலா வீடு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், இருவரும் கலந்து கொண்டனர். அதில், செந்தில் பேசும் போது எனக்கு புரிதலில் சில குழப்பங்கள் இருந்தது. அவருக்கும் புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. இது எல்லா காதல் திருமண வாழ்க்கையில் நடக்கக்கூடிய பிரச்சனைதான். திருமணத்திற்கு முன்பு முன்னதாக எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. ஆனால், கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு இடையே புரிதலில் சின்ன குழப்பம் ஏற்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் புரிதல் சரியாகி எங்களுக்குள் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது.
மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் இல்லை.. அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான்.. மிஸ் ஆகிடுச்சு..!
இப்போது, எங்களுடைய மகன் அந்த புரிதலை இன்னும் அதிகமாக மாற்றி விட்டான். காதல் திருமணம் ஆக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, கல்யாணம் செய்து கொண்ட முதல் மூன்று வருடங்கள் நீங்கள் எப்படியாவது கடந்து விட வேண்டும். அந்த மூன்று வருடங்களை கடந்துவிட்டால் உங்களுக்குள் பிரிவு வராது.
காரணம் அவரை பற்றி உங்களுக்கும் உங்களைப் பற்றி அவருக்கும் இடையே புரிதல் ஒரு நிலை வந்திருக்கும், எங்களுக்குள் இப்போது சுமூகமாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்று செந்தில் பேசிக்கொண்டிருக்கும் போது அதை தொடர்ந்து பேசிய ஸ்ரீஜா, நான் கேமராவுக்கு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம்/ ஆனால், உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்துள்ளது.
மேலும் படிக்க: TTF வாசனை அடுத்து கைதாகும் VJ சித்து? யூடியூப் வீடியோவால் வந்த சிக்கல்..!
மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டும் இப்போதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் பிறந்து விட்டதால் சண்டைக்கு அதிகமான நேரம் கிடைக்கவில்லை. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமான சண்டைகள் எல்லாம் போட்டு இருக்கிறோம். சிலமுறை புரிந்து விடலாம் என்று கூட சில முறை யோசித்து இருக்கிறோம். ஆனால், அதனை கடந்து மீண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று எனக்குள் தோன்றும். என்னை பொறுத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன். காரணம் இந்த உறவு ரத்த சம்பந்தம் இல்லை அல்லவா, உங்களது உறவிலும் அந்த மேஜிக் வந்துவிட்டால் என்ன ஆனாலும், சரி அந்த உறவு நம்மை விட்டு போகாது என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.