வீட்டை விட்டு துரத்திய கமல்? வெறும் ரூ. 60 வைத்துக்கொண்டு நடு ரோட்டில் தூங்கிய சரிகா!

Author:
7 August 2024, 11:29 am

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் உலகநாயகனுமான கமல்ஹாசன் 1988 ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராசன். சரிக்கா கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு கமல் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது பெற்று சரிகா கௌரவிக்கப்பட்டார். சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது . ஆம் கடந்து 2004 ஆம் ஆண்டு சரிக்காவுடன் உறவை கமல்ஹாசன் முடித்துக் கொண்டார். கமலஹாசனை பிரிந்த சரிக்கா சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். மகள்கள் மட்டும் கமலஹாசன் வளர்ந்து வருகிறார்கள் .

இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பிரிந்த போது. நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் சரிகா. அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நானும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இதனிடையே எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட முடிவெடுத்தோம்.

sarika kamal

என்னுடைய முடிவை நான் சிறப்பான முடிவாகவே கருதுகிறேன். விவாகரத்து என்பது ஒரே இரவில் எடுக்கும் முடிவு இல்லை. நான் பல நாட்கள் யோசித்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நான் கமல்ஹாசனை பிரிந்து அவரது வீட்டை விட்டு வெளியேறும் போது என்னிடம் வெறும் ரூ.60 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது கமலை பிரிந்த உடன் நான் நடுரோட்டுக்கு வந்து விட்டேன். அந்த சமயத்தில் நான் வெறும் ரூ. 60 பணத்தையும் என்னுடைய காரையும் வைத்துக்கொண்டு நண்பரின் வீட்டுக்கு சென்றேன் .

அங்கே குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு இரவில் நான் என் காரிலேயே வந்து தூங்கினேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது என சரியாக கூறியிருந்தார். சரிக்காவின் இந்த பேட்டியை குறித்து கமல்ஹாசனிடம் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதற்கு, நீங்கள் ஏன் சரிகாவுக்கு உதவவில்லை? அவரை ஏன் அப்படி சவாலான சூழ்நிலை எதிர்கொண்டார்? என கேட்டதற்கு சரிக்கா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை.

அவர் பொதுவாக அதுபோன்ற பெண்ணே கிடையாது. அதனால் அவருக்கு உதவி செய்தால் அவர் நிச்சயம் அந்த சமயத்தில் வருத்தப்பட்டு இருப்பார். மேலும், என்னைப் போன்ற ஒருவர் உதவி செய்வதை அவர் பெரும் அவமானமாக கருதுவார். அப்போது நான் உதவி இருந்தாலும் அவரின் நிலைமை மிக மோசமாகி இருக்கும் அவருடைய அனுதாபத்தையும் தேடாமல் மிகவும் பொறுமையாக இருந்து.இந்த முடிவை எடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 305

    0

    0