இப்படிப்பட்ட மனைவியை ஏமாத்திட்டீங்களே..? கமல் விட்டு சென்றது குறித்து சரிகா பகீர் தகவல்!

Author: Rajesh
6 January 2024, 9:18 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை ஸ்ரீவித்யா உடன் நெருங்கி பழகி வந்தார் . தொடர்ந்து நடிகை கௌதமி, பூஜா , ஆன்ட்ரியா , விருமாண்டி பட நடிகை அபிராமி என பல நடிகைகளுடன் நெருக்கமாக பழகி காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகை சரிகா பேட்டி ஒன்றில், கமல் ஹாசன் உங்களை பிரிந்து சென்ற பிறகு அது குறித்து உங்களுக்கு வருத்தம் இருந்ததா? என கேட்டதற்கு, இல்லை…. எனக்கு அவர் மீது வருத்தமோ, கோபமோ இல்லை. அது அவரின் சுதந்திரம்? அதனால் அவர் மீது வெறுப்போ கோபமோ இல்லை.

ஆனால், அதே சமயம் அவரை போல் எனக்கு வேறொருடன் இன்னொரு வாழ்க்கை வாழ ஆசையே இல்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால் எனக்கு தைரியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உண்டு. எனக்கு இந்த வாழ்க்கையே போதும் என கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மிகவும் பெருந்தன்மையோடு பேசினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!