அந்த இடத்திலிருந்த மச்சத்தை எடுக்க ஆபரேஷன்.. இயக்குனரால் கதறிய சரோஜாதேவி..!(வீடியோ)
Author: Vignesh13 February 2024, 7:12 pm
தென்னிந்திய சினிமாவில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று அடைமொழிகளால் புகழப்பட்டு வந்தவர் நடிகை சரோஜாதேவி. இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக அந்த காலத்தில் திகழ்ந்தவர். முன்னதாக, சரோஜா தேவியின் முதல் படத்தில் மகாகவி காளிதாஸ் நடிக்கும் போது இவரை போட்டோ எடுத்திருக்கிறார்.
அப்போது, அவர் கண்ணில் இருந்த மச்சத்தை நீக்க வேண்டி ஆபரேஷன் செய்ய சொல்லி துணை இயக்குனர் பயமுறுத்தி உள்ளாராம். இதனால், அழுததோடு மட்டுமல்லாமல் அவரது அம்மாவிடம் சொல்லி அந்த படம் வேண்டாம் சென்றுவிடலாம் என்று கதறி உள்ளார் சரோஜாதேவி.
அதன்பின்னர், சரோஜாதேவியை அவரது அம்மா சமாதானப்படுத்தி இயக்குனரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த இயக்குனர் சீதா ராம் சாஸ்திரி ஆபரேஷன் பற்றி அவர் சொன்னதை கேட்டவுடன் அந்த இயக்குனர் கடுமையாக சிரிக்க ஆரம்பித்து உள்ளார்.
உங்கள் மகளை கேலி செய்யத்தான் அவர் அப்படி கூறியிருக்கிறார் என்றும், கண்ணில் இருக்கும் அந்த மச்சத்தால் தான் அவர் மிகப்பெரிய ஹீரோயினாக வருவார் என்றும், தெரிவித்துள்ளார். அப்போது, தான் அதை நம்பவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றாலே போதும் என்ற எண்ணம் தான் அந்த சமயத்தில் இருந்தது.
ஆனால், அவர் சொன்னதைப் போல் என் முதல் படமே தேசிய விருதுதை பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்த வாய்ப்பினையும், நல்ல அந்தஸ்தையும் கொடுத்தது என நடிகை சரோஜாதேவி பேட்டி ஒன்றில் பங்கேற்கையில் தெரிவித்துள்ளார்.