படம் பார்க்க டீ சமோசா; மோசமான நிலையில் பாலிவுட் ஸ்டார் படம்; அதிர்ச்சியில் சூர்யா

Author: Sudha
15 July 2024, 12:32 pm

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற பயோபிக் படமான ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் சர்பிரா மோசமான வரவேற்பைப் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கரா ஹிந்தியிலும் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமாரை வைத்து படத்தை இயக்க சூர்யா, ஜோதிகா மற்றும் சிலருடன் இணைந்து படத்தை தயாரித்தனர்.

சர்பிரா திரைப்படம் முதல் நாள் இரண்டரை கோடி, வசூல் செய்தது. நேற்று சண்டே என்பதால் வசூல் நான்கரை கோடியாக அதிகரித்தது.ஆனாலும், இந்த வசூல் மிக மிகக் குறைவு.

இன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதனால் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க , பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் தியேட்டர்களில் இப்படத்தைப் பார்க்க வந்தால் டீ, சமோசா ஆகியவை இலவசம் என அறிவித்துள்ளார்கள்.

‘சர்பிரா’வைப் பார்க்க ‘சமோசா’ இலவசமாகத் தர வேண்டிய சூழல் வந்துள்ளது குறித்து ஹிந்தித் திரையுலகத்தினர் மற்றும் தயாரிப்பாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 148

    0

    0