பிறந்தநாள் டிரீட்; சித்தார்த் படத்தில் இணைந்த சரத்குமார்; ஹாப்பி ஆன ரசிகர்கள்,.

Author: Sudha
14 July 2024, 4:07 pm

நடிகர் சரத்குமார் தமிழ்த் திரைப்பட உலகில் வில்லனாக அறிமுகமானார். சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் சரத்குமார். கடந்த சில வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் அடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இது சித்தார்த்திற்கு 40வது படமாக உருவாகிறது.

இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.நடிகர் சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…