விருப்பம் இல்லாமல் சினேகாவுடன் நடித்த விஜய்.. சசிகலா மிரட்டியதால் பயந்து போன தளபதி..!

Author: Vignesh
4 September 2023, 6:00 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்திய அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

vijay- updatenews360 2

இந்நிலையில், நடிகர் விஜய் இருபது வருடங்களுக்கு முன்னர் சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து ஓடிய சம்பவம் தற்போது குறித்து வலைப்பேசு அந்தணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது, நடிகை சினேகா ஜோடியாக நடித்து 2003இல் வெளிவந்த வசீகரா படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்து இருக்கிறார். ஆனால், சசிகலா கேட்கிறார் நீங்கள் கண்டிப்பாக கால்ஷீட் கொடுத்து தான் ஆக வேண்டும் என மிரட்டல் வந்த நிலையில், அதன் பின் தான் விஜய் விருப்பம் இல்லாமல் வசீகரா படத்தை நடித்து கொடுத்தாராம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி