இளைய தளபதி..! சூப்பர் ஸ்டார்..!! விஜய்க்கு எந்தப் பட்டம் பிடிக்கும்? – உண்மையை உடைத்த சதிஷ்..!

Author: Vignesh
19 January 2023, 11:03 am

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.

varisu thunivu - updatenews360

துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேட்டனர். இதற்கு முன்னரே “வாரிசு” இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார். மேலும் இந்த சர்ச்சைக்கு சமீபத்தில் விளக்கம் கூட தெரிவித்திருந்தார்.

varisu-thalapathy-vijay-updatenews360

இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து காமெடி நடிகர் சதிஷ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த சதீஷிடம் சூப்பர் ஸ்டாரை விட சுப்ரீம் ஸ்டார் தான் பெரியது என்ற சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

sathish - updatenews360

அதற்கு பதிலளித்த சதிஷ் வீட்டை விட்டு வந்து ஒவ்வொருவரும் ஸ்டார் அந்தஸ்தை ரசிகர்கள் கொடுக்கிறார்களே அதுவே பெரிய விஷயம் தான் என்றும், இதில் பெரிய ஸ்டார் சிறிய ஸ்டார் என்றெல்லாம் கிடையாது, ஸ்டார் என்றாலே பெரியவர்கள் தான் என்று சதிஷ் கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் கத்தி திரைப்படத்தின் போது விஜய் தன்னுடைய பட்டப்பெயரில் உள்ள இளைய தளபதி பெயரை எடுத்துவிட்டு தளபதி என்று வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பதாகவும், நமக்கும் வயசாவது தெளியுதல்ல என தெரிவித்தார். மேலும் அவர், நான் தான் உங்களுக்கிடைய லுக்கிற்கு நீங்கள் இன்னமும் 60 வயதுவரையில் இளைய தளபதி என்று வைத்துக்கொள்ளலாம் என விஜய்யுடன் கூறியதாக அந்த பேட்டியில் காமெடி நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 484

    0

    0