சரத்குமாரை பதம் பார்த்தா ஓகே வா?.. கொச்சையாக பேசிய நடிகர் முகம் சுழித்த ராதிகா..!
Author: Vignesh8 July 2023, 12:30 pm
பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷ். இவர் ஜெரி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியனாக இருந்து வருகிறார்.

இதனிடையே, விஜய், ஆர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். இதனிடையே, காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ் நாய் சேகர் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக என்ட்ரீ கொடுத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சதீஷ் நடிகை ராதிகாவிடம் சரத்குமாரை பதம் பார்த்தா ஓகேவா?? லவ் டுடே படத்தில் இது போன்ற வசனம் இருந்தது அதை பார்க்கும் பொழுது நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராதிகா நான் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது இவரின் இந்த பேச்சுக்கு மேடை நாகரிகம் இல்லாமல் இப்படி சதிஷ் பேசுகிறார் என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சதீஷ் ஓ மை கடவுளே படத்தின் போது தர்ஷா குப்தாவிடம் அநாகரிகமாக பேசி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.