சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் சத்யராஜ்.. ‘ஒரு நாளுக்கு இவ்ளோ வேணும்’ என கேட்டதால் அதிர்ச்சியில் லைகா நிறுவனம்..!
Author: Vignesh6 October 2022, 2:30 pm
நடிகர் சத்யராஜ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய குணசித்திர நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
சின்ன படமாக இருந்தாலும் சரி, பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பு திறமையால் எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.
இந்தியன் 2
இந்நிலையில் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சத்யராஜிடம் கேட்டு வருகிறார்களாம். படத்தின் ஒரு முக்கிய போலீஸ் ரோலில் தான் அவரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவெடுத்து இருக்கிறாராம்.
ஆனால் சத்யராஜ் சம்பளத்தை கேட்டு ஷங்கர் – லைகா என எல்லோரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள். ஒரு நாளுக்கு 1 கோடி சம்பளம் கொடுங்க என கண்டிப்பாக கேட்கிறாராம்.
இது பற்றி தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.