பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்த சத்யராஜ், இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் சத்யராஜ், 1954ம் ஆண்டு கோவையில் பிறந்தார். இவர் தனது சினிமா கெரியரில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். சத்யராஜ் நடிகனாவதை அவரது தாயார் விரும்பவில்லை, இருப்பினும் அவர் ஹீரோவாகும் கனவை கைவிடவில்லை. 22 வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சத்யராஜ், கடந்த 1978-ம் ஆண்டு ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இவர் தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற இந்தி படத்தில் சத்யராஜ் தமிழராகவே நடித்திருந்தார்.
சத்யராஜின் உண்மையான பெயர், ரங்கராஜ் சுப்பையா. இவர் கடந்த 1979 -ல் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர். திவ்யா லைம்லைட்டில் இருந்து விலகி இருக்க விரும்பினாலும், ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
அதேபோல் சத்யராஜின் மகன் சிபிராஜ் தந்தையைப் போலவே சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிபிராஜ். நடிகர் சிபி திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
சத்யராஜ் தனது கேரியரில் நெகட்டிவ் ரோல்களிலும் ஆக்ஷன், எமோஷன்ஸ், டிராமா மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் அவருக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.
கட்டப்பா கேரக்டரில் நடிக்க இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி முதலில் தேர்வு செய்தது சத்யராஜ் இல்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த வேடம் முதலில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த வேடத்தில் மோகன்லால் நடிக்க முடியாமல் போனதால் சத்யராஜ் கட்டப்பா ஆனார்.
60 வயதை கடந்தாலும் படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த ஆண்டு அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், வீட்ல விஷயம், பக்கா கமர்ஷியல் ஆகிய 4 படங்கள் வெளிவந்தன. தற்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், நயன்தாரா உடன் கனெக்ட்போன்ற படங்களில் நடித்து வரும் சத்யராஜ் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
This website uses cookies.