கேவலம் பணத்துக்காக இப்படி பண்ணலாமா?.. ரமணா பட பாணியில் மோசடி.. சத்யராஜ் மகள் ஷேர் செய்த வீடியோ..!

Author: Vignesh
9 March 2024, 11:48 am

தமிழ் சினிமாவில் வில்லன் , ஹீரோ , குணசித்திர நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறவர் நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்தியராஜ். இவர் சமூக அக்கறையுள்ளவராக பல்வேறு காரியங்களில் தன்னை ஈடுபட்டு வருகிறார்.

இந்திய ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா அட்சய பாத்திரம் அறக்கட்டளை நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்நிறுவனம் அரசின் இலவச மதிய உணவுத் திட்டதை தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் முயற்சியாகும் .

இந்நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவ துறையில் கலக்கி வரும் நிலையில், தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பதிவுகளை போட்டு வருகிறார். அவர் மருத்துவத் துறையில் நடக்கும் ஒரு மோசமான விஷயம் குறித்து தற்போது, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தனியார் மருத்துவமனைகளில் பணத்திற்கு ரத்த பரிசோதனை என பல டெஸ்ட்கள் எடுக்கக் கூறுவார்கள்.

sathyaraj daughter divya

நோயாளி குணமானாலும், அங்கேயே பணத்திற்காக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை வருகிறார்கள். ஆனால், அங்கேயும் பணம் பிடுங்கும் இடமாக உள்ளது. எங்களது நிறுவனம் மூலம் பலருக்கு உதவிகள் செய்து வருகிறோம். ஆனால், எல்லா நோயாளிகளுக்கும் உதவ முடியாது. சில தனியார் மருத்துவமனைகள் இதே போல் செய்வதை நிறுத்த வேண்டும். இதை சேவையாக செய்ய வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பணம் பிடுங்கும் இடமாக மருத்துவத்தை பார்க்க கூடாது என பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 222

    0

    0