மாமனாரா நடிச்சிட்டு மருமக கூட Swim Suit ல நடிச்சது.. – சத்யராஜ் கலகல பேட்டி..!

Author: Vignesh
10 August 2023, 11:00 am

80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.

கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

sathyaraj -updatenews360

சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.

பேட்டி ஒன்றில் பங்கேற்ற சத்யராஜ் தன்னை ரசிகர்கள் வில்லனாக ஏற்றுக் கொண்டதால், எப்படிப்பட்ட கேரக்டரும் எப்படிப்பட்ட வசனத்தில் பேசி இயல்பாக நடிக்க முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.

sathyaraj-updatenews360

மேலும், வேதம் புதிது படத்தில் அமலா தனக்கு மருமகளாக நடித்திருந்ததாகவும், ஜீவா படத்தில் தனக்கு ஜோடியாக இருந்ததாகவும், ரெண்டு பேரும் ஸ்லிம் சூட்டில் வருவோம். இதே மாதிரி மிஸ்டர் பாரத் படத்தில் அம்பிகா தனக்கு மருமகள், ரஜினி சாருக்கு ஜோடி அதே நேரத்தில் ரசிகன் ஒரு ரசிகை படத்தில் அம்பிகா தனக்கு ஜோடி, ரெண்டு நாள் தன்னை மாமானு கூப்பிட்டு, மூன்றாவது நாள் தன்னை மச்சான்னு கூப்பிடுவாங்க அது என்னவோ ரசிகர்கள் தன்னை ஏத்துக்கிட்டாங்க ரஜினி சாருக்கு தான் அப்பாவாக நடிக்கும் போது தனக்கு 31 வயது என்றும், மணிரத்னம் சாரின் பகல் நிலவு படத்தில் தனக்கு பேரன் பேத்தி எல்லாம் கூட இருப்பாங்க என கலகலப்பாக குறிப்பிட்டிருந்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 748

    5

    4