உங்களுக்கு இன்னும் வயசு ஆகல… சத்யராஜை பார்த்து அசந்து போகும் இளசுகள்..!(Video)

Author: Vignesh
25 May 2024, 6:23 pm

80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.

sathyaraj-updatenews360

மேலும் படிக்க: GOAT படத்தின் VFX வேலை ஓவராம்.. முக்கிய காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.

மேலும் படிக்க: உனக்கென்னமா நீ மனநோயாளி.. சுசித்ராவுக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

இந்நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது மிகவும் சவாலான விஷயம்தான். பிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாம். இதில், மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்களை நடிக்க அணுகிய போது நிறைய பேர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விட்டார்களாம். ஆனால், நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டு வந்தது.

sathyaraj-updatenews360

மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்கள் குறித்து நடிகர் சத்யராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது குறித்து, ஊடகங்களிடம் பேசி இருக்கும் சத்யராஜ் நரேந்திர மோடி பாத்திரத்தில் நான் நடிப்பதாக வரும் தகவல் சமூக ஊடகங்கள் மூலம் தான் தெரிய வந்திருக்கிறது. இது எனக்கு புதிய செய்திதான். அதே நேரத்தில், பெரியார் வேடத்தில் நடித்த நான் மோடிவேடத்தில் நடிக்கலாமா? என கேட்கிறார்கள். பல படங்களில் நார்த்திகம் பேசிய நார்திகரான எம் ஆர் ராதா ஆன்மீகவாதியாகவும் நடித்திருக்கிறார். இந்த வாய்ப்பு, வந்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். எனவே மோடி பாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பது உண்மைதான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜுக்கு 66 வயதான நிலையில் மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றும் வீடியோவை அவரது மகள் வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu