சத்யராஜை மன்னித்த ரஜினி.. படையப்பாவுக்கு கை கொடுப்பாரா இந்த கட்டப்பா..!

Author: Vignesh
29 May 2024, 3:15 pm

ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை அசிங்கப்படுத்தியவர் நடிகர் சத்யராஜ். காவிரி பிரச்சனை நடிகர் சங்க பிரச்சனை என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினிகாந்தை மறைமுகமாக அசிங்கப்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இதனை ரஜினிகாந்த் மேடையில் இருக்கும் போதே பலமுறை சத்யராஜ் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது ரஜினி மற்றும் சத்யராஜ் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

sathyaraj rajini

மேலும் படிக்க: ECR பண்ணை வீடு.. பேட்டாவில் கமிஷன்.. தொடர் விமர்சனங்கள் குறித்து மௌனம் களைத்த வடிவேலு..!

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்தக் கூலி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

sathyaraj rajini

மேலும் படிக்க: இந்திய சினிமாவில் யாரும் வாங்காத மிகப்பெரிய சம்பளம்.. அட்லீயை தொக்காக தூக்கிய பிரபல நிறுவனம்..!

வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் ரஜினியின் நெருங்கிய நண்பராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ரஜினி மற்றும் சத்யராஜ் ஒரே திரைப்படத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவுதான் சத்யராஜ் ரஜினியை அசிங்கப்படுத்தி இருந்தாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தான் ஒரு மாமனிதன் என்பதை ரஜினிகாந்த் இந்த செயலின் மூலமாக வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 207

    0

    0