சூப்பர் ஸ்டார் அண்ணனின் ‘மாம்பழம் திருடி’.. இயக்குநர் ஓபன் டாக்..!

Author: Vignesh
8 August 2024, 2:49 pm

ரஜினியின் அண்ணன் சத்ய நாராயண ராவ் தற்போது மாம்பழத் திருடி என்ற ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். முன்பு பல இயக்குனர்கள் நடிப்பதற்கு அழைத்தபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இது குறித்து அப்படத்தை இயக்கி உள்ள ஏ.ஆர்.ரசீம் கூறுகையில், இந்த படத்தில் நடிக்க சத்யநாராயண ராவை அணுகியபோது முதலில் மறுத்தார். அதையடுத்து ஒரு முறை கதையை மட்டும் கேளுங்கள் என்று இப்படத்தின் கதை சொன்ன போது, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் பணம் ஏதும் வாங்கவில்லை. அவர்தான் எங்களுக்கு செலவு செய்தார். பெண்களின் பாதுகாப்பு குறித்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினியின் அண்ணன் நடித்திருப்பதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன் என்கிறார் ஏ.ஆர்.ரசீம்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!