“முடிஞ்சா என் மேல Case போட்டுக்கோ” – பகிரங்கமாக நிவேதா பெத்துராஜ்க்கு சவால் விடுத்த பிரபலம்..! (வீடியோ)

Author: Vignesh
12 March 2024, 5:39 pm

கடந்த சில வாரங்களாக சவுக்கு சங்கர் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் உதயநிதியையும் வைத்து மிக மோசமாக பேசி வந்தார். இதற்கு நிவேதா பெத்துராஜ் மிகவும் மனம் நொந்து என்னை நிம்மதியாய் இருக்க விடுங்கள் என்று கெஞ்சியும் கேட்டுவிட்டார். ஆனால், அவற்றையும் மீறி சவுக்கு மீண்டும் அவரை சீண்டி வருகிறார். அதிலும், சன் நியூஸில் நிவேதா குறித்து போட்ட போஸ்ட் எல்லாம் எடுத்து இதுக்கு அக்ரீமெண்ட் ஏதாவது போட்டு இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். இது நிவேதாவை மேலும் காயப்படுத்தி இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜ் மற்றும் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்தபோது, இருவரும் பேட்டியளித்து இருந்தனர். அதில், நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி எப்படி இருப்பார் என்று பேசியிருக்கிறார். அவர் என்னிடம் ஆட்டிட்யூட் காட்ட மாட்டார். மிகவும் கேரிங்காக இருப்பார் என்று கூறி இன்னுமாங்க உங்களுக்கு புரியவில்லை என்று வெட்கப்பட்டு பேசிய வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு உதயநிதியும் சிரித்தவாறு ரியாக்ஷன் கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வந்தனர்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சவுக்கு சங்கர் நிவேதா பெத்துராஜ் சம்பந்தமாக நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றும், என் மீது வழக்கு தொடரட்டும் என்றும், பகிரங்கமாக சவால் விடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 187

    0

    0