“இந்த இத்துப்போன பசங்கள வச்சிட்டுதான் விஜய் CM ஆக ஆசைப்படுறாரா? சராமாரியா விமர்சித்த சவுக்கு !

Author: Shree
9 October 2023, 4:44 pm

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிரது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸை நோக்கி காத்திருக்கும் நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

lokesh vijay

அதுமட்டும் அல்லாமல் சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கில் விஜய்யின் ரசிகர்களுக்காக ட்ரைலர் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் ட்ரைலரில் செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் ரியலாகவே செய்து முடித்தனர். விஜய் ரசிகர்களால் சூறையாடப்பட்ட ரோகிணி தியேட்டர் போர்க்களம் போல மாறியதோடு, 400 இருக்கைகள் சேதமாகின. விஜய் ரசிகர்களின் இந்த மோசமான செயலை கண்டித்து ப்ளூ சட்டை மாறன் உட்பட பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சவுக்கு சங்கரிடம் கேட்டதற்கு, அது குறித்து நானும் கேள்விப்பட்டேன்… தியேட்டரில் விஜய் ரசிகர்கள் நடந்துக்கொண்டவிதம் ரொம்ப மோசம். இந்த பசங்களை வச்சிக்கிட்டுதான் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகணும்ன்னு ஆசைப்படுகிறாரா? பொது இடமான ஒரு தியேட்டரில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட தெரியாத இதுபோன்ற ரசிகர்களை வைத்துக்கொண்டு விஜய் முதலமைச்சர் கனவு காண்பது வேடிக்கையாக இருக்கிறது என தன் பாணியில் விமர்சித்துள்ளார் சவுக்கு சங்கர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 429

    1

    0