ரத்த குழாயில் அடைப்பு.. பாரதி பட நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!(video)

Author: Vignesh
12 April 2024, 6:29 pm

தமிழ் சினிமாவில் வில்லன் குணச்சித்திர ரோல்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் சாயாஜி ஷிண்டே. பாரதி படத்தில் சுப்ரமணிய பாரதியாக நடித்து அதிகம் பிரபலமானார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

sayaji shinde

இந்நிலையில், நேற்று நடிகர் சாயாஜி ஷிண்டேக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!

sayaji shinde

மேலும் படிக்க: நா காலேஜ் ஸ்டூடண்ட்.. பரவால்ல ரேட் என்னன்னு சொல்லு.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

அதனை தொடர்ந்து, நடிகர் சாயாஜி ஷிண்டேக்கு ரத்த குழாயில் அடைப்பு இருந்ததை நீக்க angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் அவை இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!