கவர்ச்சி உடையில் ஐட்டம் பாடலில் ஆட்டம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சயீஷா..!

Author: Vignesh
24 March 2023, 3:00 pm

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

arya-Sayyeshaa-updatenews360-1

17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் திருமணத்திற்கு முன்பே கமிட்டாகி காப்பான் படத்தில் நடித்தும் இருந்தார் சாயிஷா.

sayesha-updatenews360

இதனிடையே, சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ‘காப்பான்’ ‘டெடி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் அடிக்கடி தங்களது லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  

sayesha-updatenews360

இந்த நிலையில், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். இந்த ஐட்டம் பாடலுக்காக 40 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

புஷ்பா படத்தில் சமந்தா போட்ட ஐட்டம் ஆட்டத்திற்கு இணையாக கெளதம் கார்த்திக்கோடு சாயிஷா ஆடியுள்ளார்.

Sayyeshaa-Updatenews360 (4)

நடிகை சாய்ஷா “பத்து தல” படத்தில் வரும் “அடாவடி” பாடலில் கவர்ச்சியான நடனம் ஆடி உள்ளார். ஆனால் 2 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் சமயத்தில் இது தேவையா என நெட்சன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வரும் நிலையில் நடிகை சாய்ஷா அதற்கு பதிலளிக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றிய பதிவிட்டுள்ளார்.

Sayyesha - updatenews360

குறித்த பதிவில் “தான் மீண்டும் வந்து விட்டேன் தனக்கு மிகவும் பிடித்ததை செய்வதற்க்கு, அது நடனம் தான் என்றும், பத்து தல படத்தில் உள்ள இந்த அற்புதமான பாடலை ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசையமைத்து இருப்பதாகவும், “பத்து தல” படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டு அதனுடன் “அடாவடி” பாடலின் போஸ்டரையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 783

    6

    0