ஜெயம் ரவிக்கு இரண்டாவது திருமணம்? மும்பையில் தடல்புடல் ஏற்பாடு.. பிரபலம் சொன்னது உண்மையா?!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 11:12 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா மகளான ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் மனைவியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார்.

ஆனால் இதை ஆர்த்தி மறுத்துள்ளார். என்னுடன் சொல்லாமல் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என அறிக்கை வெளியிட்டார்.

Jayam Ravi Second Marriage

இதனிடையே ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் எடுத்த அனைத்து போடோக்களையும் டெலிட் செய்தார்.

அனைவரின் நலன் கருதிதான் விவாகரத்து முடிவை எடுத்தேன் என ஜெயம் ரவியும் அறிவித்திருந்தார். கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு மேலாக இந்த பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் இது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்க: அதிக லாபத்தை கொடுத்ததா வேட்டையன்..? வெளியானது வசூல் விபரம்!!

ஜெயம் ரவி தனது கார் மற்றும் பாஸ்போர்ட் ஆர்த்தியிடம் உள்ளதாக காவல் நிலையத்தில் கூறியிருந்தார். இதையடுத்து அதை மீட்ட போது, ஆர்த்தி தனக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை, அவர் என்னுடைய போன் காலை எடுப்பதே இல்லை என போலீசிடம் கூறியுள்ளார்.

jayam ravi second marriage bayilvan

ஜெயம்ரவியும் ஆர்த்தியும் இணை பிரியாமல் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர். எதனால் இவர்கள் பிரிந்தார்கள் என்பதுதான் தெரியவில்லை, நிச்சயம் இதற்கான காரணம் என்னவென்று ஜெயம் ரவி கோர்ட்டில் சொல்லுவார் என நம்பலாம்.

second marriage bayilvan

தற்போது மன உளைச்சலால் இருக்கும் ஜெயம் ரவி மும்பையில் தங்கி உள்ளார். அங்கு அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெறுவதாக கூறுவது எல்லாம் கதையாகத்தான் இருக்கும. அதற்குள் நாம் போக வேண்டாம் என பயில்வான் கூறியுள்ளார்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!