இரண்டாம் திருமணமா? பயில்வானனுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Author: Shree
30 July 2023, 4:48 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமாகிவிட்டது.

இதனிடையே பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், லால்சலாம் படத்தின் உதவி இயக்குனரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வருவதாகவும் இதனை அப்பா ரஜினியிடம் கூறி இரண்டாம் திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்டார் என்றும் அதனால் ரஜினி கோபித்து கொண்டு மன உளைச்சலை தவிர்க்க மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை கிளப்புனார்.

இந்நிலையில்அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ” அப்பாவுடன் எந்த சண்டையும் இல்லை என கூற ஜெயிலர் ஆடியோ லான்ச்சிற்கு சென்றபோது எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது பயில்வானனுக்கு பதிலடி கொடுப்பது போன்று உள்ளதாக நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 486

    1

    0