பிரபல பாடகருடன் ரகசிய காதல்…. பார்ட்டியில் சிக்கிய மிருணாள் தாகூர்!

Author: Shree
14 November 2023, 1:48 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர் தீபாவளி கொண்டாட்டத்தை பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மிருணாள் தாகூர் பிரபல பாலிவுட் பாடகரான Badshah என்பவருடன் கைகோர்த்துக்கொண்டு நெருக்கமாக செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைராகியது. இதையடுத்து இவர்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்திகள் உலா வந்தது. ஆனால், இதனை பாடகர் Badshah மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் இந்த கிசுகிசு ஓயவில்லை.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 408

    0

    0