வாய்ப்புக்காக அத பண்ண சொன்னா மறுக்கக்கூடாது.. வெளியானது ரம்யா கிருஷ்ணனின் 40 ஆண்டு ரகசியம்..!

Author: Vignesh
14 December 2023, 4:49 pm

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ramya krishnan - update news 360

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ramya krishnan - updatenews360

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன் நடிகையிடம் இயக்குனர் கதை கூறினால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன், இந்த காட்சியில் நடிக்க மாட்டேன். இப்படி நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது அழகு கிடையாது.

இயக்குனர் ஒருவர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில், நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து சொன்னால் அவர் ஏன் அப்படி யோசித்தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவரின் நோக்கம் தவறாக இருந்தால் நடிகைகள் மறுக்கலாமே தவிர கதைக்கும், எழுதிய திரைக்கதைக்கும் அந்த கதாபாத்திரமும் காட்சியில் வலுவாக இருக்கும்.

அதனால், அது மோசமாக இருக்கிறது. ஆபாசமாக இருக்கிறது என்று மறுக்கக்கூடாது என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். அப்படி நடிக்க மாட்டேன் என்று பல காரணங்களை கூறி அவர்களின் எதிர்காலத்திற்கு அவர்களே தடையாக இருந்து விடுவார்கள். வேறொரு படம் எடுக்கும் போது உங்களை யோசித்து கூட பார்க்க மாட்டார்கள் என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது, 50 வயதை தாண்டினால் கூட கவர்ச்சியும் சிறப்பான நடிப்பையும் அவரால் கொடுக்க முடிகிறது என்று சினிமா விமர்சகர் கூறி வருகிறார்கள். அதனால், தான் 40 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் வலுவாக பல ரோல்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 506

    0

    0