விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan12 December 2024, 9:55 am
இயக்குனர் சீனு ராமசாமி, தனது மனைவி தர்ஷனாவைப் பிரிந்து, விவகாரத்து கோரி உள்ளதாக அறிவித்து உள்ளார்.
சென்னை: கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. பாசம், குடும்பம், என உறவுகளைக் கட்டிப்போடும் இவரின் திரைக்கதைக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உண்டு.
அதிலும், 2016ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை படம் இன்றளவும் மீம்ஸ்கள் முதற்கொண்டு ரசிக்கப்பட்டு வருகிறது. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சீனு ராமசாமி எக்ஸ் பதிவு: இந்த நிலையில், தனது மனைவி உடனான விவாகரத்து குறித்து அறிவித்து உள்ளார். இது தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இதையும் படிங்க: CM வீட்டில் உள்ள முக்கிய நபர் அதானியுடன் சந்திப்பு? ஆதாரத்தை வெளியிடும் அண்ணாமலை!
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” எனக் கூறி, விவகாரத்து கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதையும் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் விவாகரத்து கோரி உள்ளனர். அதேபோல், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோரும் விவகாரத்து கோரி உள்ளனர். இவ்வாறு திரையுலகில் இருப்போர் விவகாரத்து கோருவது தொடர்கதையாகி உள்ளது.