நோ சொன்ன மலையாள சூப்பர் ஸ்டார்; சீவலப்பேரி பாண்டி; வெளிவராத சோக முடிவு..
Author: Sudha9 July 2024, 4:40 pm
30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. இந்த திரைப்படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..
1 சீவலப்பேரி பாண்டி என்பது 1994 ஆம் ஆண்டு வெளியான வாழ்க்கை வரலாற்று குற்றவியல் திரைப்படம்.
2 பிரதாப் போத்தன் இத்திரைப்படத்தை இயக்கினார். திரைக்கதை எழுதியவர் கே. ராஜேஷ்வர்.
3 அதே பெயரில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம்.
4 இந்தத் திரைப்படம் 24 ஜூன் 1994 ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
5 திரைப்படத்தின் வெற்றி நடிகர் நெப்போலியனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
6 திரைப்படத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்குவதற்காக கதாபாத்திரங்களும் சம்பவங்களும் திரைக்கதையில் இணைக்கப்பட்டது”.
7 இந்தத் திரைப்படம் முதன்மையாக ஒரு இதழில் தொடராக வெளிவந்து பிறகு எழுத்தாளர் சௌபாவால் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டது.
8 பிரதாப் போத்தன் ஆரம்பத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை சீவலப்பேரி பாண்டி வேடத்தில் நடிக்க கேட்டிருந்தார்.ஆனால் கால்ஷீட் இல்லாததால் அவர் மறுத்துவிட்டார்.
9 திரைக்கதை ஆசிரியர் ராஜேஷ்வர் திருநெல்வேலிக்குச் சென்று மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்களுடன் உரையாடினார். அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார்.இந்தப் படம் அதே பெயரில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும், பல காட்சிகள் கற்பனையானவை என ராஜேஷ்வர் கூறினார்
10 சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாகவும் அதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் 2005 இல் அறிவிக்கப்பட்டது. பின்பு அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது.
11 நாவல் ஆசிரியர் சௌபா தன் மகனை கொலை செய்த குற்றத்திற்காக 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். செய்தியாளனே செய்தியாகிவிட்டேன்’ என மனம் உடைந்து பேசினார். 2018 மார்ச் 11-ம் தேதி மதுரை மத்திய சிறையில் சௌபா அடைக்கப்பட்டார்.
12 அதே மாதம் உடல்நலக் குறைவால் அவர் காலமானார்.
0
0