நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே
Author: Prasad16 April 2025, 4:14 pm
கராத்தே பாபு
“ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில் ரவி மோகனுடன் கே.எஸ்.ரவிக்குமார், சக்தி வாசு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை “டாடா” இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்தபோது சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதாவது சட்டசபையில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே நடக்கும் விவாதங்களை மிகவும் தத்ரூபமாக படமாக்கியது போல் அந்த வீடியோ அமைந்ததிருந்தது. மேலும் அந்த வீடியோவில் ரவி மோகன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பலரிலும் தற்காலத்தில் தமிழக அரசியலில் வலம் வரும் பல்வேறு அரசியல்வாதிகளின் சாயல் இருப்பதாக ஒரு சர்ச்சையும் எழுந்தது.
நான் தான் பா கராத்தே பாபு…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரை சந்தித்த சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “கராத்தே பாபு” திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளிவந்ததை பார்த்து அந்த திமுக அமைச்சர் ரவி மோகனையும் இயக்குனர் கணேஷ் கே பாபுவையும் நேரில் அழைத்தாராம். “என்னப்பா கராத்தே பாபு என்று ஒரு படம் எடுக்குறீர்கள் போல இருக்கே” என்று கேட்டாராம். அதற்கு இயக்குனர், “ஆமாம் சார்” என்று கூற, “அந்த கேரக்டர் கொஞ்சம் நம்மள மாதிரி இல்லை?” என்று கேட்டாராம் அமைச்சர்.
அதற்கு இயக்குனர், “இல்லை, அந்த கதாபாத்திரத்திற்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை சார்” என்று கூறினாராம். அதற்கு அந்த அமைச்சர் சிரித்துக்கொண்டே “நான் தான் பா கராத்தே பாபு” என்று கூறினாராம். அந்த அமைச்சர் வேறு யாரும் இல்லை. தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கும் சேகர் பாபுதான்.