நயன்தாராவை நடிக்க வைத்தது என் தவறுதான்; வருத்தத்தில் தனுஷ் பட இயக்குனர்
Author: Sudha4 July 2024, 2:57 pm
ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த ’கஹானி’ என்ற படம் ரீமேக் செய்யப்பட்டு ’அனாமிகா’ என்ற பெயரில் தெலுங்கிலும்,நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்பட்டது.ஹிந்தியில் வெளியான ’கஹானி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வித்யா பாலனின் சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படமாக இது இருந்தது.
தமிழிலும் தெலுங்கிலும் நயன்தாரா அனாமிகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தை சேகர் கம்முலா இயக்கினார். இவர் நுண்கலை முதுகலை பட்டம் பெற்றவர்.சேகர் கம்முலாவின் முதல் படம் “டாலர் ட்ரீம்ஸ்”சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
இவர் ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றார் . சேகர் கம்முலாவின் அனாமிகா படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
நயன்தாராவுக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது, அவரை வேறு மாதிரி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு சீரியஸ் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் சேகர் கம்முலா.அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் இப்போது தனுஷை வைத்து குபேரா படத்தை இயக்கி வருகிறார்.