நயன்தாரா அந்தப் படத்தில் நடிக்காமல் இருந்து இருக்கலாம்.. தனுஷ் பட இயக்குனர் OpenTalk..!

Author: Vignesh
4 July 2024, 12:45 pm

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம்.

nayanthara - updatenews360.jpg 2

இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா தற்போது, மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது, மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளாராம். இந்நிலையில், கஹானி ரீமேக் செய்த தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முல்லா கூறுகையில், கஹானி படம் ரீமேக்கான அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். இருந்தாலும், பெண்களை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

nayanthara - updatenews360.jpg 2

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இந்த படத்தில் நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், படம் தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில், நயன்தாராவை நடிக்க வைத்தது தவறான தேர்வு என்று சேகர் கம்முல்லா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது, இவர் தனுஷை வைத்து குபேரா என்ற திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • amazon prime bagged jana nayagan movie for 115 crores ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…