நானே வருவேன் VS பொன்னியின் செல்வன்: இந்த காரணத்திற்காக தான் போட்டி.. உண்மையை உடைத்த செல்வராகவன்..!

Author: Vignesh
4 October 2022, 10:20 am

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி என்றாலே வெற்றி கூட்டணி என்ற பெயர் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து வருகின்றன. இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

எனவே மயக்கம் என்ன படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இருவரும் நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் இரட்டை வேடங்களில் மிரட்டிய இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி திரையில் வெளியானது. படத்திற்கு என்னதான் சில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பொதுவாக படம் நன்றாக இருப்பதாகவே பேசப்பட்டு வருகின்றது.

ஆனாலும் இப்படம் பொன்னியின் செல்வன் படத்துடன் வெளியானதால் நானே வருவேன் படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிகின்றது. பொன்னியின் செல்வன் போன்ற இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருந்த படத்துடன் நானே வருவேன் ஏன் வெளியானது என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது அந்த கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த காலத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகும். அப்போது ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாவை போல இருக்கும். ஆனால் அந்த ட்ரெண்ட் தற்போது மாறியுள்ளது.

எனவே அதை நானே வருவேன் படத்தின் மூலம் திரும்ப கொண்டுவர முயற்சித்தோம். மேலும் தொடர் விடுமுறை என்பதால் இரண்டு படங்களையும் ரசிகர்கள் திரையில் பார்ப்பார்கள் என எண்ணி படத்தை வெளியிட்டோம். அதை தவிர மிகப்பெரிய படமான பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிபோட நானே வருவேன் படத்தை வெளியிடவில்லை என்றார் செல்வராகவன்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 899

    0

    0