வைரலாகும் MISS U ASH ஹேஷ்டேக்…”அஸ்வின்”ஒரு சிங்கம்…செல்வராகவன் போட்ட பதிவு..!
Author: Selvan18 December 2024, 5:44 pm
சமூக வலைத்தளங்களில் #MISSYOUASH வைரல்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
இன்றைக்கு இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று இருக்கும் போது அஸ்வினும்,விராட் கோலியும் ஓய்வு அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அப்போது விராட்கோலி எமோஷனல் ஆகி,அஸ்வினை கட்டிப் பிடிப்பார்.
அந்த சமயம் அஸ்வினும் கண் கலங்குவார்.ஒரு வேளை அஸ்வின் ஓய்வு அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த போது,கொஞ்ச நேரத்தில் ஆட்டம் மழையினால் ரத்து ஆனது.
அதன்பின்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து பேட்டி கொடுக்கும் போது,தன்னுடைய சர்வேதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார்.
இதையும் படியுங்க: குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!
அவர் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் மேட்சில் கேப்டன் ரோஹித்திடம் இந்த தகவலை சொல்லியுள்ளார்.அவர் தான் நீங்கள் அடுத்த மேட்ச் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சார்பாக அதிக விக்கெட் எடுத்துள்ள நபராக அணில் கும்ப்ளே-க்கு அடுத்தபடியாக 537 விக்கெட் எடுத்துள்ளார்.
ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை 3 முறை செய்துள்ளார்.இவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டருக்கு உதாரணமாக டெஸ்ட் போட்டிகளில் 6 முறை சதம் அடித்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கட்டில் 11 முறைக்கு மேலாக தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.
இப்படி பல வித சாதனைகளை புரிந்து,இந்தியாவின் பெரும்பாலான மேட்சுக்கு மேட்ச் வின்னராக செயல்பட்ட ஆல் ரவுண்டர் அஷ்வினின் ஓய்வு அறிவிப்பை,பல கிரிக்கெட் ரசிகர்கள்,பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி,அவரது சாதனைகளை பட்டியிலிட்டு வருகின்றனர்.
செல்வராகவனின் ட்விட்டர் பதிவு
அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினை புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
What ever the situation he never gives up ! @ashwinravi99 is a lion ! Pride of our nation 🙏 Salute thalaiva !!! pic.twitter.com/gxTD8KvML2
— selvaraghavan (@selvaraghavan) December 18, 2024
அதில் “எந்த ஒரு நிலையிலும் விட்டு கொடுக்காமல் போராடும் குணத்தை கொண்டவர்.அவர் சிங்கம் மாதிரி…நம் நாட்டுக்கு அஸ்வின் விளையாடியது மிகப்பெரிய பெருமை..சல்யூட் தலைவா’என்று குறிப்பிட்டுள்ளார்.சமூக வலைத்தளங்கள் முழுவதும் தற்போது MISS YOU ASH ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது.