“என்னை செருப்பால அடிச்சாங்க” அவ்ளோ கஷ்டபட்டேன்… வாழ்க்கை ரகசியங்களை உடைக்கும் செல்வராகவன்..!
Author: Vignesh18 February 2023, 7:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.
இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்து தந்போது திரைக்கு வந்துள்ளது.
இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திடீரென வந்து தத்துவத்தை தூவிவிட்டு சென்றுவிடுவார்.
இந்நிலையில், நடிகராக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் செல்வராகவன் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் எந்த படத்தை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை தன்னை செருப்பால் அடித்தது குறித்து தெரிவித்து இருந்தார்.
அதில் ‘முதன் முதலில் தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜாவிடம் சென்று நான் படித்தது போதும், சினிமாவிற்கு செல்கிறேன் என்று கூறியதாகவும், அப்போது தன்னை அவர் செருப்பால் அடித்தார்’ என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.