அடக்கடவுளே! இதுவும் போச்சா? இரண்டாவது மனைவியுடன் செல்வராகவன் சண்டை!

Author: Rajesh
29 February 2024, 4:38 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

selvaraghavan-updatenews360 (1)

அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ. அதில் சோனியா அகர்வால் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் தான் இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு 2010ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தற்போது செல்வராகவன் தன் மனைவி தன்னை திட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மனைவி கீதாஞ்சலி, “ஏதாவது பேசு என சொல்ல நீ என்னை ரொம்ப திட்டுற, இன்சல்ட் பண்ற நான் பேசமாட்டேன் போ” என மனைவியுடன் செல்லை சண்டை போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அட கடவுளே எப்படி இருந்த மனுஷன் எவ்வளவு பெரிய ஜீனியஸ் இவருக்கே இப்படி ஒரு நிலைமையா? என பரிதாபத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?