உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!
Author: Selvan3 March 2025, 3:51 pm
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?
இவர் அவ்வப்போது தனது மனதில் எழும் கருத்துக்களை வீடியோக்களாக வெளியிடுவது வழக்கம்,அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் செல்வராகவன்,”உங்களது லட்சியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்” என்று அறிவுறுத்துகிறார்.”நீங்கள் செய்யும் திட்டங்களை,உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கூட தெரிவிக்க வேண்டாம்.அமைதியாக செயல்படுங்கள்,உங்கள் முயற்சியை மட்டும் கவனியுங்கள்”என்று கூறினார்.
மேலும்,”எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்காதீர்கள்.ஒருமுறை உதவி கேட்டால், அதை ஆயுள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.உங்கள் முயற்சியை மற்றவர்களிடம் பகிர்ந்தால்,அது பலிக்காமல் போய்விடும்” என உருக்கமாக பேசினார்.
அவரின் இந்த வீடியோக்கு பல ரசிகர்கள் “தீர்க்க தரிசி போல பேசுகிறார்” என்று பாராட்டியுள்ளனர்.திரைப்பட உலகில் மட்டுமல்லாமல்,வாழ்க்கையில் முன்னேற செல்வராகவன் கூறிய இந்த வார்த்தைகளை ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.