இந்த எட்டி பாக்குற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத.. சாய்பல்லவியை கடிந்து கொண்ட பிரபல இயக்குனர்..!

Author: Vignesh
18 June 2024, 3:21 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

ngk

மேலும் படிக்க: என்னை அடிமையா வெச்சிருந்தாங்க.. அவரு சொல்லியும் கேட்கலையாம்.. ஜீவி பிரகாஷ் Open Talk..!

இந்நிலையில், நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் பற்றி NGK படத்தில் நடிகர் சூர்யாவின் அம்மாவாக நடித்த நடிகை உமா சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில், மற்ற இயக்குனர்கள் தனக்கென ஒரு மானிட்டர் வைத்து அதை பார்த்தது சீன் சரியாக வருகிறதா இல்லையா என்று பார்ப்பார்கள். ஹீரோ, ஹீரோயின்களையும் பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால், செல்வராகவன் மானிட்டர் பக்கம் யாரையுமே விடமாட்டார். எந்த ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் சரி இதுவரை யாரையும் அவர் அனுமதித்ததே இல்லை.

ngk

அதை போல், இந்த படத்திலும் சூர்யா உட்பட யாரையும் மானிட்டர் பக்கம் அனுமதிக்கவே இல்லை. ஒருமுறை சாய்பல்லவி மானிட்டரில் தன் முகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க எட்டி பார்த்திருக்கிறார். உடனே அங்கு வந்த செல்வராகவன் நோ நோ இது என்னுடையது இந்த எட்டி பாக்குற வேலையெல்லாம் இங்க வச்சுக்க கூடாது. யாரும் இங்கே வரக்கூடாது என்று போக சொல்லிவிட்டார் என்று உமா பகிர்ந்து உள்ளார்.

  • Sai Abhyankar viral songs ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!