வெறிகொண்டு சீறிப்பாயும் தனுஷ்… “புதுப்பேட்டை 2” செல்வராகவன் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Author: Rajesh
7 February 2024, 9:53 am

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் சினேகா நடித்து கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இத்திரைப்படத்தில் சினேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறது.

puthupettai 2

கொக்கி குமார் கேரக்டரில் தனுஷ் மிரட்டியெடுத்திருப்பார். குறிப்பாக இப்படத்தில் தனுஷின் ஜோடியா சினேகா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தார்கள். உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அப்போவே ரூ. 3 கோடி வரை வசூலித்தது. இந்த படம் வெளியான சமயத்தில் சினேகாவின் ரோல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.மேலும் தனுஷின் நடிப்பு கொலைநடுங்க வைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அப்டேட் வெளியிட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன். ஆம், ” புதுப்பேட்டை 2 ” இந்த வருடம் துவங்கும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இது தனுஷ் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பு மிரட்டி எடுக்கும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி