“நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்”- தீயாய் பரவும் செல்வராகவன் போட்ட ட்வீட்..!

Author: Vignesh
4 May 2023, 4:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.

selvaraghavan-STALIN. updatenews360 (1)

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை என சில முக்கிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நானே வருவேன் என்ற படத்தை தனுஷ் வைத்து இயக்கியிருந்தார்.

இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இதனிடையே, செல்வராகவனின் ரசிகர் ஒருவர் காதல் கொண்டேன் படம் குறித்து டுவிட்டரில், விவேக் ஒரு காமெடியில் சொல்வார் இயக்குனர் ஒவ்வொரு புரோமோவையும் செதுக்கியிருக்கிறார் என, அப்படி ஒரு படம் என்று பதிவிட்டு இருந்தார்.

அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்திருக்கார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு செல்வராகவன், ஏன் நண்பா, நான் சாகவில்லை என்றும், ஓய்வு பெறவும் இல்லை எனவும், என்னுடைய நேரத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டேன், இப்போது வந்துவிட்டேன் என பதிவு செய்து உள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ