செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!

Author: Vignesh
10 May 2024, 4:33 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மட்டும் இல்லாமல் சமீப காலமாக நடிகராகவும் செல்வராகவன் கலக்கி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக என்ன படம் வரப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், புதுப்பேட்டை படத்தில் நடந்த சம்பவமும் குறித்து நடிகர் பாவா லட்சுமணன் பகிர்ந்து உள்ளார்.

bava lakshmanan

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவா லக்ஷ்மணன் புதுப்பேட்டை படத்தில் இரண்டு நாட்கள் நடித்தேன். எனக்கு நடிக்கவே தெரியவில்லை என செல்வராகவன் கூறிவிட்டார். மிகவும் அசிங்கமான கெட்ட வார்த்தைகளில் கூட என்னை திட்டினார். மனசு கேட்கல அதனால், படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். செல்வராகவன் தன்னிடம் துணை இயக்குனராக பணி செய்பவர்களையும் கடுமையாக திட்டுவார். செல்வராகவன் அங்கு வருகிறார் என்றால் துணை இயக்குனர்கள் அனைவரும் ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள்.

bava lakshmanan

வெள்ளித் துறையில் மூத்த நடிகர்களில் ஒருவர் ஆவார். பாவா லக்ஷ்மணன் பல நகைச்சுவை காட்சிகள் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர். வாமா மின்னலு என்ற வசனமே அதற்கு உதாரணம். சமீபத்தில், இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 331

    0

    0